அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள தகவல்: விருதுநகர் அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில், 2006 முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த பயின்று இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர்
இதன் தொடர்ச்சியாக ஏப்.21 முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2க்கான இலவச பயிற்சி வகுப்பு, விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் தொடங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் ஏப்.10 முதல் 19ம் தேதி வரை நேரில் சங்க அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment