Title of the document
 தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்  ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.   நாடு முழுவதும்  1,199 கேந்திரிய வித்யலயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட  தமிழகத்தில் மட்டும் 48 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் உள்ளன.    இந்தப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, கே.வி.சங்கதன் என்ற, கேந்திரிய வித்யாலய ஆணையரகம் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது.    இந்தப் பள்ளிகளில், எல்.கே.ஜி, யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.   நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக சென்னை மண்டல அலுவலகம்  வெளியிட்டுள்ள தகவல்:    9-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.  விண்ணப்பிக்க வரும் மார்ச்  19-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.    கேந்திர வித்யாலய தலைமையகத்தின் kvsonlineadmission.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.    பிற வகுப்புகளுக்கு...    அதேபோன்று  பிளஸ் 1 தவிர, இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 2-இல், ஆன்லைன் பதிவு தொடங்கும். இந்த வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும்  ஏப். 9 மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.    பிளஸ் 1 சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும்  விண்ணப்பப் பதிவு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post