கணினி பயிற்றுநர் போட்டித் தேர்வு அறிவிப்பு

 பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் கிரேடு-1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணிகளில் புதிய நபர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.   20ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.   பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நிலைக்கு சமமான பதவிகளில் இந்த கணினி பயிற்றுநர்கள் 814 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.   இதற்கான போட்டித் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. தேர்வு நடக்கும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.    இந்த தேர்வில் கணினி அறிவியல் 130, பொது அறிவு 10, உளவியல் 10 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும்.   கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு :    மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.    http://www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.