அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வளரும் நேர்மறையாளர் விருது

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307


திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வளரும் நேர்மறையாளர் விருது வழங்கி கௌரவித்த சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தினர்.

திருச்சி,மார்ச்.16;
சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தின்  சார்பில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர்  அரசுப் பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு அபாகஸ் கற்றல் கருவிகள்  வழங்கப்பட்டன..
 
 நிகழ்ச்சிக்கு  மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் கா.மருதநாயகம் முன்னிலை வகித்தார்.
பள்ளித்தலைமை ஆசிரியர் பூ.ஜெயந்தி வரவேற்றுப் பேசினார்..

கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் நிறுவனர் தலைவர்  சுதா கூறியதாவது:
 கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு மதிப்பெண்அடிப்படையில் இல்லாமல் மதிப்புகளின் அடிப்படையில் குழந்தைகளை தேர்வு செய்து வளரும் நேர்மறை சிந்தனையாளர் விருதும்,மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நேர்மறை சிற்பி விருதும்,சமுதாயத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த ஒளிரும் நேர்மறைசிந்தனையாளர் விருதும் வழங்கி கொண்டிருக்கிறோம்..கலாம் அறப்பணி நல் இயக்கமானது அக்டோபர் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு திருச்சி கரூர்,காஞ்சிபுரம்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை ,சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு விருதும் அபாகஸ் உபகரணங்களும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கி கொண்டிருக்கிறோம்.எங்களது முக்கிய நோக்கம் நேர்மறை எண்ணங்களை அரசுப் பள்ளி மாணவர்களிடம் விதைக்க வேண்டும் மற்றும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.கலாம் அய்யா விட்டுச் சென்ற பாதையில் தொடர்ந்து  செயல்பட வேண்டும் என்பதே என்றார்..

விழாவில்
 ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவர்களுக்கு இந்தியன் அபாகஸ் உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

பின்னர் மாயனூர் தலைமையாசிரியர் குணசேகரனுக்கு ஒளிரும் நேர்மறை சிந்தனையாளர் விருதும்,பள்ளிதலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நேர்மறை சிந்தனை சிற்பி விருதும், ஒவ்வொரு வகுப்பிலும் அனைத்து திறன்களிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவருக்கு வளரும் நேர்மறையாளர் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது..

விழாவில்  லால்குடி கூட்டுறவு வீட்டுவசதி சங்க மேலாளர் மாதாசங்கர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும்,சுகாதார கல்வி குறித்து மங்கை ஹெல்த் சென்டர் இயக்குநர் டாக்டர் மங்கையர்க்கரசியும் மாணவர்களிடம் பேசினார்கள்.

விழாவில் கலாம் அறப் பணி நல் இயக்க செயலாளர் பார்த்தசாரதி, இ.புதூர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவி பத்மாவதி,அபாகஸ் பயிற்றுநர் சாந்தி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் காளீஸ்வரி,கிராமக்கல்விக் குழுத்தலைவர் முத்துச்செல்வம்,பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவர் மணிவண்ணன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை புஷ்பலதா நன்றி கூறினார்.

முன்னதாக அறக்கட்டளையின் சார்பில் பள்ளியின்ஆசிரியருக்கு பட்டுக்கோட்டையில் உள்ள இந்தியன் அபாகஸ் பயிற்சி மையத்தில் இரண்டு நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

Post a Comment

0 Comments