பவள விழா கொண்டாடிய அரசுப்பள்ளி

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Hereமாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி,இரத்தினகிரி,கீழ்மின்னல் ஆகிய தெருக்கள் வழியாக மாணவர்களை அழைத்துக்கொண்டு தலைமையாசிரியர் திருமதி R.S.வாசவி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு.S.தண்டாயுதபாணி, கல்விக்குழு தலைவர் திரு.N.பாலமுருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.N.இராஜலட்சுமி, நாட்டாண்மைதார் திரு.M.தட்சணாமூர்த்தி, ஆசிரியர்கள் திரு.N.மோகன், திருமதி.M.தமிமுன்னிசா, திருமதி.S.பிரிசில்லா, திருமதி.B.வாசுகி ஆகியோர் மாணவர்களை அழைத்துக்கொண்டு மாணவர்களை கீழ்மின்னல் பள்ளியில் சேர்ப்போம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் சென்றனர்.


கீழ்மின்னல் பள்ளி 75 ஆண்டுகள் பவளவிழா கொண்டாடியது குறிப்பிடத் தக்கது.இப்பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி,அபாகஸ் வகுப்பு,உருது வகுப்பு,NMMSஎனப்படும் தேசிய திறனறித் தேர்விற்கான சிறப்பு வகுப்புகள் என ஆங்கிலப்பள்ளிக்கு இனணயாக இந்த அரசுப்பள்ளி இயங்கி வருகிறது.

ஊ.ஒ.ந.நி.பள்ளி,
கீழ்மின்னல்,
ஆற்காடு ஒன்றியம்.
வேலூர் மாவட்டம்
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments