ஒன்றாம் வகுப்பு மாணவன் ஆண்டறிக்கை வாசித்து அசத்திய அரசுப்பள்ளி ஆண்டுவிழா

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி வட்டம்,
திருவரங்குளம் ஒன்றியம்,
கொத்தமங்கலம் கிராமம்,
சிதம்பரவிடுதி அரசு
தொடக்கப்பள்ளியில்
ஆண்டுவிழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.உமாதேவி தலைமை தாங்கினார்.

தலைமை ஆசிரியர் சந்திரா அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் பள்ளியின் முதல்வகுப்பு மாணவன் பிரகதீஸ்வரன் விழாமேடையில் ஆண்டறிக்கையை சிறப்பாக வாசித்ததை அனைவரும் வியந்து பாராட்டினர்.

அதிலும் குறிப்பாக பெரியண்ணன் ஆசிரியர் அம்மாணவனைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரூ.500 ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்வு சிறப்பாக இருந்தது.

அனைத்து பாடங்களிலும் 90%-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற *45 மாணவர்களுக்கு ”கற்றல் மேசை” எனப்படும் TABLE MATE பரிசினை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.உமாதேவி வழங்கினார். இத்தகைய ” *கற்றல் மேசைகளை”* நன்கொடையாளர்கள் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியது பாராட்டத்தக்கது.

*சதுரங்கப்போட்டியில் மாநில அளவில் சாதனை* படைத்த நான்காம் வகுப்பு மாணவன் சச்சினுக்கும், மாவட்ட அளவில் சாதனை படைத்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கௌதம், நிவேதா, அருங்குழலிக்கும் ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.துரை.ரெத்தினம் “சாதனையாளர் விருது” வழங்கி பாராட்டினார்.

*1 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான SMART * எனப்படும் “அறிவுத்திறன் வகுப்பறை”* யை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய திரு.புலவர்.பழனி. அரங்கசாமி-க்கு கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம்.சதீஷ் ஆசிரியர் ”நன்கொடையாளர் விருது” வழங்கி கௌரவப்படுத்தினார்.

உண்டியல் சிறுசேமிப்பில் அதிக பணம் சேமித்து, அத்தொகையினை அஞ்சல் நிலைய நிரந்தர வைப்பு நிதியாக செலுத்திய 23 மாணவர்களுக்கு ஆசிரிய பயிற்றுனர்கள் திரு.ஸ்டாலின் மற்றும் திரு.சிவராஜ் “சிறுசேமிப்புச்செல்வர் விருது” வழங்கி பாராட்டினர்.

இவ்விழாவில் “மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளன.
அதிலும் குறிப்பாக முதல் வகுப்பு மாணவர்கள் இன்றைய தமிழ் செய்தித்தாள் படித்தல், TODAYS ENGLISH NEWSPAPER READING, ஆண்டுவிழா பத்திரிக்கை வாசித்தல், நூலகப் புத்தகங்கள் படித்தல், வாய்ப்பாடு 16 வரை சொல்லுதல் போன்றவை பாராட்டும்படி உள்ளது. நன்கொடையாளர்கள் பலர் இப்பள்ளிக்கு நன்கொடை வழங்கியது சிறப்புக்குரியது” என்று *தலைமை வகித்த வட்டாரக் கல்வி அலுவலர்* திருமதி.உமாதேவி பேசினார்.

”இப்பள்ளின் ஆண்டுவிழா ஒரு தொடக்கப்பள்ளி விழாபோல் இல்லாமல், கல்லூரி விழாபோல்
நடத்தப்படுகிறது. இப்பள்ளி முதல் வகுப்பு மாணவன் ஆண்டுவிழா மேடையில் ஆண்டறிக்கை வாசித்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த பள்ளியிலும் இதுவரை நான் காணாத நிகழ்வு. சிறப்பாக படித்த மாணவனுக்கும், தயார்செய்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள். இப்பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர் வசதிக்கு நான் ஏற்பாடு செய்வதோடு,
இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்யவும், பெற்றுத்தரவும் நான் தயாராக இருக்கிறேன்” என
*சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர்*
திரு.சிகரம்.சதிஷ்குமார  வாழ்த்திப் பேசினார்.

“அடுத்த வருடம் இப்பள்ளிக்கு மேலும் ஒரு SMART CLASS வசதி, நன்கொடையாளர்கள் மூலம் பெற்று வழங்கப்படும். அதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் அனைத்து
திறன்களையும் பெறவேண்டும் என்பதே
எங்கள் இலக்கு ” என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன் பேசினார்.

இவ்விழாவில் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

PTA செயற்குழு உறுப்பினர் M.S.குணசேகரன், மாணவர் கலந்தாய்வுக்குழு தலைவர் K.K.முத்துவேல், சோம.சுரேஷ், SMC தலைவி கே.புவனேஸ்வரி, SMC துணைத் தலைவி ஞா.மலர்விழி உள்பட பல பள்ளிப் பொறுப்பாளர்கள் விழாவினை ஏற்பாடு செய்திருந்தினர்.

பள்ளி ஆசிரியர்கள் இராஜேஸ்வரி, வினோ, இலக்கியா, ஜெயந்தி ஆகியோர் கலைநிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.

ஆண்டுவிழா முடிவில் ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.