60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் மடி கணினி - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Image result for sengottaiyan


பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் லேப்-டாப் வழங்கப்படும்.   இதேபோல் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை இன்று நடந்தது.    மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமிபூஜை யை தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி செம்மையாக செயல்பட்டு வருகிறது.  நேற்று முதல் பிளஸ்-2 தேர்வு தொடங்கி உள்ளது.  மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உள்ளனர். மாணவர்கள் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்.  பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. (பட்டய பயிற்சி)க்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.    இவர்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.  வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்.   9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது. இதை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.  பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் லேப்-டாப் (மடிகணினி) வழங்கப்படும்.   இதே போல் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இவை வழங்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.