அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல் 

அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 பேருக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடை பெற்ற விழாவில், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகை யில் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப், ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச அளவிலானபார்வையற்ற, மாற்றுத்திற னாளிகள், காதுகேளா மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் பதக்கம் வெல்வோர், பங்கேற்போர், தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி யில் வெள்ளிப்பதக்கம் வென்ற தடகள வீரர் தருணுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற துடுப்பு படகோட்டும் வீரர் லட்சுமணன் ரோகித் மாரடப்பாவுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றவும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வாள் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சி.ஏ.பவானிதேவிக்கு மின்உற்பத்தி நிறுவனத்தில் பணி யாற்றவும் முதல்வர் கே.பழனிசாமி திங்கள்கிழமை தலைமைச்செயல கத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
காசோலைகள் வழங்கல்மேலும், ஜகார்தாவில் நடைபெற்ற 3-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற 4 வீரர் களுக்கு ஒரு கோடியே 20 லட்சம் மதிப்புள்ள காசோலைகளையும், திருவனந்தபுரத்தில் நடந்த 35-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 12 பேருக்கு ரூ.49 லட்சம் மதிப்புள்ள காசோலைகளையும் 4 பயிற்சியாளர்களுக்கு ரூ.9லட்சத்து 75 ஆயிரம் மதிப் புள்ள காசோலைகளையும் ஊக்கத்தொகையாக முதல்வர் வழங்கினார்.அதோடு, பிப்ரவரியில் சென் னையில் நடந்த சென்னை ஓப்பன் ஏடிபி சேலஞ்ச் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு மாநிலடென்னிஸ் சங்கத்துக்கு தமிழக அரசு சார்பில்ரூ.60 லட்சத்துக்கான காசோலையை அதன் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், தொழில்துறை அமைச்சர்எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அந்தந்த துறைகளின்செயலாளர்கள் கலந்துகொண் டனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Post a Comment

0 Comments