ஏப்.1-இல் வங்கிகளுக்கு விடுமுறை

Join Our KalviNews Telegram Group - Click Here


நடப்பு நிதியாண்டுக்கான வங்கிக் கணக்குகள்  முடிவடைவதை ஒட்டி அனைத்து வங்கிகளுக்கும் வரும் திங்கள்கிழமை (ஏப். 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினத்தில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் செயல்படாது. இதனால், பணப் பரிவர்த்தனைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிவர்த்தனைகளை நேரடியாக மேற்கொள்ள இயலாது.
அதேவேளையில், இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி கணக்குகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. அதேபோன்று, பணம் செலுத்தும் இயந்திரங்கள் வாயிலாக டெபாசிட் செய்வதிலும் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று கூறியுள்ளன.

மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமை என்பதால் மார்ச் 30-ஆம் தேதி வங்கிகளுக்கு முழு வேலைநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்