சென்னைப் பல்கலைக்கழக M.Phil தேர்வு முடிவு இன்று வெளியீடு !!

சென்னைப் பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (பிப். 21) வெளியிடப்பட உள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2018 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
அதுபோல, 2019 ஆகஸ்ட் மாத எம்.ஃபில். தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாளாகும். விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.