Title of the document
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற சாலை ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.    இந்த  தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து மனு அளித்தனர்.    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்) சங்க பொதுச்செயலாளர் மாரிமுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:    கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஜாக்டோ ஜியோ சார்பாக வேைலநிறுத்த போராட்டத்தில் எங்கள் சங்கம் பங்கேற்றது.    இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்கு பிறகு பிணையில்  வெளிவந்த 4 சாலை ஆய்வாளர்கள் காமராஜ், சிவன்ராஜ், எஸ்.ஈஸ்வரன் கணேஷ் உள்ளிட்ட சில ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஊழியர்களுக்கு மேற்கண்ட நாள்களுக்கு ஊதியம் பிடித்தம்  செய்யப்பட்டுள்ளது.   போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான குற்றப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.    இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி கேட்டு கொண்டதன் பேரில், மேலும், பொதுமக்கள் நலன்கருதியும் கடந்த ஜனவரி 30ம் தேதி போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது. தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.    எனவே, நெடுஞ்சாலைத்துறையில்  தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஊழியர்கள் நலன்களை கருதி தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post