Title of the document

குரூப் - 1' தேர்வில், பீடி தொழிலாளி மகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியைகள் வெற்றி பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 1' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.


 இதில், துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி துறை உதவி கமிஷனர், 8; துணை பதிவாளர், ஒன்று; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து, தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி, எட்டு என, 85 பேர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது


.இந்த தேர்வில், திருநெல்வேலியை சேர்ந்த, சரோஜா என்பவர், தமிழில் தேர்வு எழுதி, போலீஸ், டி.எஸ்.பி.,யாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை முருகானந்தம், சினிமா தியேட்டர் ஊழியர்; தாய் பால்த்தாய், பீடி சுற்றும் தொழிலாளி.மாநகராட்சி பள்ளியில் படித்த சரோஜா, 10ம் வகுப்பில், 350; பிளஸ்2 வில், 719 மதிப்பெண் பெற்றார்.


 உயர்கல்வி பயில வறுமை தடையாக இருந்ததால், மாண்டிசோரி கல்வி பயிற்சி பெற்று, பள்ளி ஒன்றில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, தொலைநிலை கல்வியில், தமிழில், எம்.ஏ., - பி.லிட்., முடித்தார்.இதையடுத்து, போட்டி தேர்வுகளில் பங்கேற்றார்.


 போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றும், நீளம் தாண்டுதலில் தோல்வியுற்றார். இதையடுத்து, குரூப் - 1 தேர்வு எழுதி, முதல் முயற்சிலேயே தேர்ச்சி பெற்றுஉள்ளார்.


தன் வெற்றி குறித்து, சரோஜா கூறுகையில், ''நேர்முக தேர்வின் போது, உங்கள் பொழுதுபோக்கு என்ன என, கேட்டனர். பொழுதுபோக்கு என, எதுவும் இல்லை.


 தாயாருக்கு பீடி சுற்றும் பணிக்கு உதவுவேன்' என்றேன். என் பதிலை கேட்டு, அதிகாரிகளே சிரித்து விட்டனர்,'' என்றார்


துணை கலெக்டரான ஆசிரியைகள்

கரூர் மாவட்டத்தில், பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியை நிறைமதி, குரூப் - 1 தேர்வில், துணை கலெக்டராக தேர்வாகியுள்ளார்.

 இவர், தாந்தோணி ஒன்றியம், சுக்காலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

 ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு தேர்வு எழுதினார். அதில், நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

தொடர்ந்து, குரூப் - 1 தேர்வில் முயற்சித்து, மாவட்ட கல்வி அதிகாரியை விட உயர்ந்த ரேங்கில் உள்ள, துணை கலெக்டர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இதேபோல, கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை அனிதா என்பவரும், குரூப் - 1 தேர்வில், துணை கலெக்டராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post