814 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு 2500 பேர் தற்போது கணினி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் 814 கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இவற்றை நிரப்ப முடிவு செய்த பள்ளிக்கல்வித்துறை, இதற்கான கல்வித்தகுதியாக எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை படிப்புடன், பி.எட் என்று நிர்ணயித்து அரசாணை பிறப்பித்தது.

இந்த அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டுள்ளது.