7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் பெயரை சரியாக அச்சிட வேண்டும் : டிடிவி.தினகரன் வலியுறுத்தல்


அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:


பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை என்பது வளரும் தலைமுறையினர் அனைவரும் அறியவேண்டிய வரலாறு. அவ்வரலாற்றை 6ம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து நீக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தேன்.


 இந்நிலையில், ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் சேர்ப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாற்றில், அவரது பெயரை  உ.முத்துராமலிங்க தேவர் என்பதற்கு மாறாக உ.முத்துராமலிங்கர் என்று அச்சிட்டுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது.


சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற ஆவணங்களிலும், அவருக்கு மத்திய அரசு தபால் தலை வெளியிட்டபோதும் உ.முத்துராமலிங்க தேவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.


 அரசு ஆவணங்களில் உள்ளதுபோல் உ.முத்துராமலிங்க தேவர் என்றே அவரது பெயரை திருத்தியமைத்து ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அச்சிடவேண்டும்