பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றம் எதிரொலி ஜூலையில் குரூப் 1 மெயின் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1ல் அடங்கிய பதவிகளுக்கான  அறிவிப்பை வெளியிட்டிருந்தது.


 அதற்கான முதனிலை தேர்வு ( மார்ச் 3ம் தேதி நடைபெறும். முதன்மை (மெயின்) எழுத்து தேர்வு மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை எழுத்து தேர்விற்கான பாட திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி முதன்மை எழுத்து தேர்விற்கான Scheme and Syllabus ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.inல்  வெளியிடப்பட்டுள்ளது.


 தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பதாரருக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என  உத்தேசித்துள்ளது.


மேலும் முதனிலை தேர்வு முன்னர் அறிவித்தவாறே மார்ச் 3ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.