Title of the document







தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் தற்போது 100% போலியோ கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. போலியோ அற்ற நாடாக இந்தியா மாறியதற்கு பின் பெரிய உழைப்பும், சரியான திட்டமிடலும், வரலாறும் இருக்கிறது.
1994-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த சொட்டு மருந்து போடப்படுகிறது. இதனால் தற்போது நாடு முழுக்க இளம்பிள்ளை வாதம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வருடம் முதலில் பிப்ரவரி தொடக்கத்தில் போலியோ சொட்டு மருந்து போடப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் இதற்கு போதிய நிதி மத்திய அரசு கைவசம் இல்லை என்று செய்திகள் வெளியானது.
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலியோ சொட்டு மருந்து இந்தியா முழுக்க மார்ச் மாதம் போடப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் போலியோ மருந்து எப்போதும் போடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். முகாம்களுக்கு குழந்தைகளை கண்டிப்பாக அழைத்து செல்ல வேண்டும். கண்டிப்பாக ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எல்லோரும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post