வெள்ளை முடி வர காரணம் தலை முடியை சரியாக பராமரிக்காமல் விட்டதே. இன்றைய இளைஞர்களுக்கு வெள்ளை முடி பிரச்சனை பெரிய பிரச்சனை, இதனாலே மன குழப்பத்திற்கும், மன உடைதலுக்கும் ஆளாகுகிறார்கள். காரணங்கள் : சரியான உணவு பழக்கவழக்கம் இன்றி இருப்பதே. சரியான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் தலை முடி வெண்மை நிறத்தில் மாற ஆரம்பிக்கும். உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ வெள்ளை முடி வரும்.
மோசமான உணவு பழக்கங்களும் இதற்கு காரணமே. அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி வருகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதால் அது முடிகளை பாதித்து கருமை நிறத்தை மாற்றி வெண்மை நிறத்தை கொடுக்கிறது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. வைட்டமின்கள் மற்றும் ஊட்ட சத்துக்களின் குறைபாடினாலே முடிகளில் அதிக பாதிப்புகள், வெடிப்புகள் ஏற்பட்டு பிரச்சனை வருகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி12 உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள் . வைட்டமின் பி12 குறைபாடு: குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமை தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்சனை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பிட்யூட்டரி சுரப்பிகளில் பிரச்சனை தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம். இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு சுற்றுப்புறச் சூழல் மாசு அடைதலால் சருமம் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அதே சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இப்பொருள்களை அதிகமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்துதல் கேடு. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை நினைவில் கொண்டு, தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.
மன அழுத்தம் எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் விதமாக, தேவையான மருத்துவத்தை மேற்கொண்டு, ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயல வேண்டும்.
டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. எனவே இதுமாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பதற்கு இவை காரணமாக அமையுமா என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
பரம்பரை இறுதியாக, இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர். ஆக இப்போதெல்லாம் இளம் வயது உள்ளவர்களுக்கும நரை முடி என்பது பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு கலரிங் பண்ணுவது நமக்கு நல்லது அல்ல. எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிறத்திற்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..
Post a Comment