அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆங்கில பாடத்தில் அடிப்படை, கற்றல் கேட்டல், எழுதும் திறன், பேசும் திறன் ஆகியவற்றின் நிலையறிந்து, குறைதீர் கற்பித்தல்படி, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலப்பாடத்தில் மாணவர்களின் அடைவுத்திறனை அறிய முன்னறித்தேர்வு, தர்மபுரி மாவட்டத்தில், 114 உயர்நிலை, 104 மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தது. இத்தேர்வை, 16 ஆயிரத்து, 444 மாணவ, மாணவியர் எழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி ஆய்வு செய்தார். நேற்று காலை இரண்டு மணி நேரம் நடந்த இத்தேர்வில், ஆங்கில பாடத்தை படித்தல், இலக்கணம் அறிதல், பேசும் திறன் மற்றும் போட்டித்தேர்வுகளை போல் வினாக்கள் அமைந்திருந்தது. தேர்வுகளின் மதிப்பீடு செய்யப்பட்ட பின், மாணவர்கள் பெற்ற மதிப்பெண், அடைவுத்திறன் போன்றவற்றை வைத்து, ஆங்கில பாடத்தில் சிறந்து விளங்கும் வகையில் தயார் படுத்தப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق