தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 7500-இருந்து ரூ. 10000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்று மாலையுடன் முடிகிறது. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு தமிழக அரசும் உத்தரவிட்டது. ஆனால், போராட்டம் தொடர்வதால், தற்காலிக ஆசிரியர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 7500-இருந்து ரூ. 10000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment