'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில், 'சஸ்பெண்ட்' ஆன, 451 ஆசிரியர் பணியிடங்களுக்கு, விருப்பம் உள்ளவர்களை இடமாறுதல் செய்ய, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
ஏழாவது நாள்
ஜன., 22ல் துவங்கிய போராட்டம், நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்தது. வேலைநிறுத்தம் காரணமாக, தொடக்கப் பள்ளிகள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டு, வகுப்புகள் நடக்காமல் முடங்கி உள்ளன. உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வந்ததால், பெரிய அளவில் பாதிப்பிலை. சில மாவட்டங்களில் மட்டும், மேல்நிலைப் பள்ளிகளும், ஆசிரியர் இன்றி காணப்பட்டன. இதனால்,பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
இதற்கிடையில், வேலைநிறுத்தத்தின் போது, பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில், அரசின் அனுமதியின்றி, மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 24ல், 422 பேரும்; 25ம் தேதி, 29 பேரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதனால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட, 451 பேர் பணியாற்றிய இடங்கள், காலியானதாக
அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில், மாவட்ட அளவில் விருப்பம் உள்ள ஆசிரியர்களுக்கு, இடமாறுதல்வழங்க, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஜாக்டோ -
ஜியோ அமைப்புடன் சேர்ந்து, ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதில், மறியலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை:
அந்த இடங்களை, காலியிடங்களாக கருதி, மாணவர்கள் நலன் அடிப்படையில், இடமாறுதல் வழியாக, ஆசிரியர்களை நியமிக்கலாம். இந்த இடங்களில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களை, மாவட்டத்திற்குள் நியமிக்க, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
Post a Comment