Title of the document

2019-20 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக்கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படுகிறது.*

*3 முதல் 5 கி மீ சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கப்படுகிறது.*

*தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதி ஆகின்றன.(DEEO post ஒழிக்கப்பட்டது போல்)*

*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்படக் கூடும்.*

*படிப்படியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக் உட்படுத்தப்படுவர்*
.*(காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, பட்டதாரி பணியிடத்திற்கு ஏற்ப தகுதி மற்றும் பதிவு மூப்பு இருப்பின்)*

*மீதம் உள்ளவர் நிலை இறக்கம் செய்யப்படலாம்.*

*ஆனால் தற்போது பெறும் ஊதியத்தில் மாற்றம் இராது.*
*அனைவரின் முன்னுரிமையும் மாநில அளவில் பேணப்பட உள்ளதாக தெரிகிறது.*

*BEO க்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட உள்ளனர்.*

*BE0 பணியிடங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.*

*BEO அலுவலகம் பார்வை மற்றும் ஆய்வு அலுவலகமாக் மாற்றப்படுகிறது.*

*தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படக் கூடும்.*

*உதவி பெறும் பள்ளிகளுக்கு 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.*

*தலைமை ஆசிரியர் பதவி*

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே இருப்பர்.*

*உதவி ஆசிரியர்கள் வகை:*

*இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர்,முதுகலை ஆசிரியர்*

*ஆகிய வகைகள் மட்டுமே*

*அனைத்து ஆசிரியர்களும், அமைச்சுப் பணியாளர்களும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.*
*அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே.*

*வட்டாரத்தை கவனிக்க BE0*

*கல்வி மாவட் டத்தை கவனிக்க DE0*

*மாவட்ட கல்வி நிர்வாகத்தை கவனிக்க CEO*

*மேற்கண்டோரின் பணியை மேற்பார்வையிட, 1 அல்லது 2 மாவட்டத்திற்கு ஒரு JD*

*இதனை கண்காணிக்க, மண்டல வாரியாக (சுமார்5 அல்லது 6 மாவட்டங்கள்) இயக்குநர்*

*என்ற வகையில் கண்காணிப்பு வளையம் இருக்கும் என கூறப்படுகிறது.*

*பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டுமே, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இருப்பார்.*

*பிற இயக்குநர்கள் மண்டல இயக்குநர்களாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டல அலுவலகத்தில் பணியாற்றுவர் எனவும் கூறப்படுகிறது.*

*இவை அனைத்தும் வாட்ஸ் அப் பகிர்வுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை. அரசாணை நடைமுறைக்கு வந்தால் தான், உண்மையான மாற்றங்கள் என்னவென்று தெரிய வரும்.*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post