Title of the document


தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறியதாவது: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாழ்வாதார ஓய்வூதியம் கூட இல்லாமல் பரிதவிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையை அரசுக்கு உணர்த்தும் வகையிலும், சத்துணவு திட்டத்தில் 30 ஆண்டுகாலம் பணியாற்றியவர்கள் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி நியமித்த கமிட்டி அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post