Title of the document
பொதுத் தேர்வு நெருங்குவதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய 50 பேர் மற்றும் 2  ஆசிரியர்கள்  சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு கல்விப் பயணம் செல்கின்றனர். 

இதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. கல்விப் பயணம் மேற்கொள்ள உள்ள மாணவர்களை பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து, பயணச் சீட்டு மற்றும்  புத்தகங்களை வழங்கினார். இந்த மாணவர்கள் 21ம் தேதி சென்னையில் இருந்து புறப்படுகின்றனர். 

அவர்களுடன் மதுரை மாவட்டம் வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்  சார்லஸ் இம்மானுவேல், திருப்பூர் தெய்வாம்மாள் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியை கலைவாணி ஆகியோர் செல்கின்றனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:


தமிழக பள்ளிக் கல்வித்துறை, பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில்  செயல்படும் அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 125 மாணவர்கள் தேர்வு  செய்யப்பட்டு அவர்களில் 50  பேர் மட்டும் சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு கல்விப்பயணம் செல்கின்றனர்.

 21ம் தேதி செல்லும் மாணவர்கள் 30ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர். இந்த  கல்விப் பயணத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 100 மாணவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post