அரசு ஊழியர்கள், தங்களின் போராட்டத்தை, புதிதாக அறிவிக்கவில்லை.
ஓராண்டுக்கும் மேலாகவே, கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை
நடத்தினர். அதற்கு, அரசு மதிப்பு அளிக்காததால் தான், காலவரையற்ற
வேலைநிறுத்தம் செய்யும் முடிவுக்கு, அவர்கள் தள்ளப்பட்டனர்.அடுத்த மாதம்,
பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. நிதியாண்டு முடிவடைய உள்ளதால், அரசு
அலுவலகங்களிலும் ஏராளமான பணிகள் இருக்கும். இத்தகைய சூழலில், வேலை
நிறுத்தம் நீடித்தால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை, தமிழக அரசு
அழைத்து பேசி, வேலை நிறுத்தத்துக்கு முடிவு காண வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ்
கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment