வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள்
செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வி
இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்
வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
திங்கள்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:-
ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவுகள் ஏதும் பெறாத நிலையில், பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்- அப் மூலம்... அவ்வாறு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதற்கு விரும்பும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியைத் தொடரலாம்.
இந்தத் தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: அவ்வாறு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆசிரியர்கள் பணியில் சேரவில்லையெனில், அந்தப் பணியிடங்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு அந்தப் பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்

Post a Comment