Title of the document



பள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 2012ல் ஜெயலலிதா ஆட்சியில் ₹5000 தொகுப்பூதியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்  நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் காலை, மாலை என இருவேளைகளிலும் தலைமையாசிரியர்களின் உத்தரவின்படி செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில் 12 அரைநாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகைபுரிந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது. 2015, 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டங்களின்போது பள்ளிகளை பொறுத்தவரை பள்ளிக்கல்வி செயலர், இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பகுதிநேர ஆசிரியர்களே முழுநேரமும்  பணியாற்றிட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

. இந்த நிலையில் வேலைநிறுத்தத்தை முடிக்க மாற்று ஏற்பாடாக தற்காலிக ஆசிரியர்கள் ₹7500 தொகுப்பூதியத்தில் நியமிப்பதாக அரசு முதலில் அறிவித்த்து. பிறகு அடுத்த நாளே ₹2500 உயர்த்தி ₹10000 சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தை முறியடிக்க தற்காலிக ஆசிரியர்கள் அறிவிப்பு நிலையிலேயே முதலில் ₹.7500, பிறகு ₹10000 என அரசாணை வெளியிடும் அரசு 7 வருடமாக பள்ளிகளில் உழைத்துவரும் 12000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய உயர்வை தரவில்லை. 7 வருடமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கையை காதுகொடுத்து கேட்காத அரசு, இதுபோன்ற வேலைநிறுத்த நாட்களில் மட்டும் பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி பள்ளிகளை திறப்பதை  தொடர்ந்து கையாண்டுவருவது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துவருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post