Title of the document
பிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு வரும் பிப்ரவரி 1ம் தேதி வழங்க உள்ள இடைக்கால பட்ஜெட்,
அடுத்த நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியானது.


 மரபுகளுக்கு மாராக தேர்தலை கருத்தில் கொண்டு முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கியதாகவும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக போராடுவோம் என்றும் கூட கூறியதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் 2019-2010க்கான இடைக்கால பட்ஜெட்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நான்கரை வருட மோடி ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில், கடைசி 5 மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியது மட்டும் பாக்கியுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் கடைசி 5 மாதங்களுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதாவது பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான செலவுகளுக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு பதிலாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது என்று செய்திகள் வந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முழு பட்ஜெட் தாக்கலாகும் என்று செய்திக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால், பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலை கருத்தில் கொண்டு நிறைய திட்டங்கள் வகுக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிஏஜி ரஃபேல் கொள்முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிஏஜி அறிக்கையில் ரஃபேல் போர் விமான விலை குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், சிஏஜி ரஃபேல் கொள்முதல் அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ரஃபேல் போர் விமானத்தில் உள்ள ஆயுதங்கள் குறித்த தகவலும் இடம்பெறாது என்றும், ரஃபேல் விமானங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததா, விதிகள் பின்பற்றப்பட்டதா போன்ற விவரம் இடம் பெறும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post