Title of the document
சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின்,
பெயர் விபரங்களின் பிழைகளை திருத்த, 23ம் தேதி வரை அவகாசம்
தரப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1க்கான பொது
தேர்வு, மார்ச், 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், எட்டு லட்சத்துக்கும்
மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், சில பாடங்களில் தேர்ச்சி
பெறாத, 2018ம் ஆண்டு மாணவர்களும், பங்கேற்க உள்ளனர்.அனைத்து
மாணவர்களுக்குமான பெயர் விபரங்கள், அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்து,
தேர்வு துறைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில், சில மாணவர்களின் விபரங்களில்
பிழைகள் கண்டறியப்பட்டன. மேலும், சில மாணவர்களின் விபரங்கள்
விடுபட்டிருந்தன.இதையடுத்து, விடுபட்ட விபரங்கள் மற்றும் பிழையாக உள்ளவற்றை
சரிசெய்ய, 23ம் தேதி வரை அவகாசம் அளித்து, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
நாளை வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களும், 23ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகளும், விபரங்களை ஆன்லைனில் திருத்தலாம் என, தேர்வு துறை இயக்குனர்,
வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment