'குரூப் - -1' பிரதான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
குரூப்- - 1 பதவிகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி துறை உதவி கமிஷனர் உட்பட, 85 பணியிடங்களுக்கு, அக்., 13 முதல், 15 வரை பிரதான தேர்வு நடந்தது. இதில், 4,199 பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வும், ஜன., 21 முதல், 25 வரை, தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்
إرسال تعليق