Title of the document
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. தனித் தேர்வர்கள் ஜனவரி 7ம் தேதி  முதல் 19ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த நாளில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தற்போது தட்கல் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில்  விண்ணப்பிக்கலாம். 

சேவை மையங்கள் தொடர்பான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தக்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தேர்வுக் கட்டணமாக ரூ.125, மற்றும் தக்கல் கட்டணம் ரூ.500, ஆன்லைன் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675 சேவை மையங்களில் பணமாக செலுத்த வேண்டும். ஹால்டிக்கெட் வினியோகம் செய்யப்படும் நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post