பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு: 21,22-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத தேர்வுத்துறையான விண்ணப்பிக்கத் தவறியவர்கள் வரும் 21, 22- ஆகிய தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன் லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாவட்டத்தில் ஜன.21, 22 ஆகிய நாள்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்ட வாரிய அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

0 Comments:

Post a Comment