Title of the document



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

பழமொழி:

Eagles do not catch flies

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

பொன்மொழி:

பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.

பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்?
கி

2.ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்?


நீதிக்கதை :
முதல் முட்டாள்!

அரேபிய தேசத்திலிருந்து, குதிரை வணிகன் ஒருவன் ஆக்ராவுக்கு வந்திருந்தான். அரபிக் குதிரைகள் என்றால், அக்பர் சக்கரவர்த்திக்கு மிகவும் பிரியம். இதை அறிந்து, சிறந்த குதிரைகள் கொண்டு வந்துள்ளதாக கூறினான் வணிகன். மிக உற்சாகத்துடன், குதிரை லாயத்திற்கு சென்று பார்த்தார், அக்பர்.

எல்லா குதிரைகளையும் பிடித்து விட்டது; அனைத்தையும் விலை கொடுத்து வாங்கினார். மேலும், பல குதிரைகள் கொண்டு வர சொல்லி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை கொடுத்தனுப்பினார்.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள்- 
''பீர்பால் எவ்வளவோ அறிவாளிகளை ஆதரித்து வருகிறோம். அப்படியிருந்தும் கூட, நாட்டில் முட்டாள்கள் அதிகம் இருப்பதாக அறிகிறேன். 

''நாளை, நாட்டில் உள்ள முட்டாள்களின் பட்டியல் தயாரித்து தர வேண்டும்; அவர்களை, எப்பாடுபட்டாவது திருத்தி விடலாம்...'' என்றார் அக்பர்.
அடுத்த நாள், முட்டாள்கள் பெயர் பட்டியலை, கொடுத்தார் பீர்பால். அதில், முதல் பெயராக, அக்பர் சக்கரவர்த்தி என்று இருந்தது.

இதை கண்ட அக்பர் கோபத்துடன், ''என்ன பீர்பல், என்னையும் ஒரு முட்டாளாக எழுதியிருக்கிறாயே... என்ன ஆணவம் உனக்கு... நான் என்ன முட்டாளா...'' என்று கேட்டார்.
''அரசே... தயவு செய்து சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தங்களை உண்மையிலேயே மிகச் சிறந்த அறிவாளியாகத்தான் மதித்து வந்தேன். சில நாட்களுக்கு முன், ஒரு காரியம் செய்தீர்கள். அதை பார்த்த பின் தான், உங்கள் பெயரையும், பட்டியலில் சேர்த்தேன்...'' 

''முட்டாள் தனமான செயலை செய்தேனா... வியப்பாக இருக்கிறதே... அது என்னவென்று சொல்...'' 
''அரசே... எங்கிருந்தோ ஒரு குதிரை வியாபாரி வந்தான். அவன் பெயர் தெரியாது; ஊர் தெரியாது; அவனை நம்பி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை, கொடுத்தனுப்பினீரே... இம்மாதிரி செயலை, மிகச் சாதாரண முட்டாள் கூட செய்ய மாட்டான்...'' 
''ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது உண்மை தான். அவன் பெயரையும், ஊரையும் அறியாமல், 1000 தங்க நாணயங்கள் கொடுத்தனுப்பியது, முட்டாள் தனமான செயல் தான். ஆனால், அவன் குதிரைகளை கொண்டு வந்து விட்டால்...'' 

''கொண்டு வந்தால் என்ன... உங்கள் பெயரை அடித்து விட்டு, அவன் பெயரை எழுதிவிட்டால் போகிறது...'' என்று சிரித்தபடியே பதிலளித்தார், பீர்பால்.
''ஆம்... இனி எவராயிருப்பினும், தீர விசாரிக்காமல், முன் பணம் தரமாட்டேன்...'' என்ற அக்பர், முட்டாள்கள் பற்றிய விவரங்களை அடியோடு மறந்து விட்டார்.


குட்டீஸ்... துணிச்சலுடன் உண்மையை, சொல்ல பழகுங்கள்.


இன்றைய செய்தி துளிகள் : 
1.மேகதாது விவகாரம்: நாளை  சட்டப்பேரவை கூட்டம்

2.பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் விரிசல் : ரயில் போக்குவரத்து ரத்து... சீரமைக்கும் பணி தீவிரம்

3.10ம் தேதி முதல் அமலாகிறது மதுரையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு

4.இயல்பைவிட வடகிழக்கு பருவமழை 11 சதவீதம் குறைவு: வானிலை மையம் தகவல்

5.துவக்க வீரர் கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து செவ்வாய்கிழமை ஓய்வுபெற்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post