Title of the document


 


மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது.



மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

ஆனால் வாகன ஓட்டிகள், "டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், "இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, அசல் உரிமத்திற்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. இதனை போக்குவரத்து காவலர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டு உள்ளனர்.
Screenshot Image

டிஜிட்டல் முறை என்பது, உங்களது ஸ்மார்ட் செல்போனில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று, மத்திய அரசின் 'டிஜிலாக்கர்' எனும் செயலியை டவுண்லோட் செய்யவும். பின் அந்த செயலியில் ஆதார் எண்ணைப் பதிவிட்டு இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை செயலியுடன் இணைப்பது கட்டாயம். அதற்கு பின், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புக் போன்ற ஒரிஜினல் ஆவணங்களை 'ஸ்கேன்' செய்து, டிஜிலாக்கர் செயலியில் சேகரித்துவைத்து கொள்ளுங்கள்.

பின்னர், போக்குவரத்து காவலர்கள் உங்களிடம் ஒரிஜினல் ஆவணத்தை கேக்கும் பட்சத்தில் இதனை காண்பிக்கலாம். இது மத்திய அரசின் டிஜிட்டல் இந்திய திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை ஆகும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post