Title of the document

மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்குவரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் நேற்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனிதவள மேம்பாட்டு தறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பங்கேற்று பேசியதாவது:மாற்று திறனாளி குழந்தைகளிடம் பரிவு காட்டுவது மட்டும் போதாது; அவர்களை கல்வி மூலம் உயர்த்துவதே, உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.

மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்கு வரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செலவை, மத்திய அரசு ஏற்கும். தவிர, மாற்று திறனாளி பெண் குழந்தைகளுக்கு, மாதம், 200 ரூபாய் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post