Title of the document



(S.Harinarayanan, GHSS Thachampet)

நாம் கொடுக்கும் ரத்த தானத்தால் பிறரது உயிர் காக்கப்படுவது மட்டுமல்லாமல் நமது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. ரத்த தானம் கொடுப்பதால் உடல் புத்துணர்ச்சியாகிறது. உடல் மட்டுமல்லாது ரத்த சிவப்பணுக்களும் புத்துணர்ச்சியடைகிறது. ரத்த தானம் கொடுப்பதால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் உறுதியாக கூறப்படுகிறது.

மிகவும் எளிதில் கிடைக்கூடிய, அனைவராலும் கொடுக்ககூடிய ஒன்று "ரத்த தானம்". ஒருவர் ரத்த தானம் செய்தால் மீண்டும் புதிதாக ரத்த அணுக்கள் உடலில் உற்பத்தியாகும். ரத்த தானம் செய்தால் ஆயுள் கூடும் என்று ஆய்வில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மறுசுழர்ச்சி செய்யப்படுகிறது, இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும். ரத்த தானம் செய்வதால் கார்பன் டை ஆக்ஸைடு நீங்கவும் உதவுகிறது. ஒருமுறை ரத்த தானம் செய்தால் 650 கலோரி செலவாகும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.

யாரெல்லாம் இரத்ததானம் செய்யலாம்?:

18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.நம் ஒவ்வொருவருடையை உடலிலும் சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.
இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.
நாம் தானம் செய்யும் இரத்தம் 350 மில்லி லிட்டர் இரத்தம் 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலில் மீண்டும் உற்பத்தியாகி விடும்.

இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.

இரத்ததானம் செய்பவரின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்

யாரெல்லாம் இரத்ததானம் செய்யக்கூடாது.?

மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்டவர்கள்,வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பால் வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்து உட்கொண்டவர்கள், மது அருந்தியவர்கள்,
மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சமீபத்தில் நோய் தடுப்பு ஊசி போட்டவர்கள், கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள்,சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா-காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்,
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் கண்டிப்பாக செய்யக்கூடாது.

இரத்தத்தில் A,B,O,AB மற்றும் அதில் பாஸிட்டிவ், நெகடிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இரத்தத்தின் பிரிவுகளை கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர். அவர் பிறந்த ஜூன் 14ம் தேதி தான் இரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post