பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பல்வேறு காரணங்களால், இடைநின்ற மாணவர்கள்மீண்டும் சேர்ந்து, கல்வியை தொடர, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இப்பிரிவின் கீழ், குறைவான வருகை பதிவு காரணமாக இடைநின்ற மாணவர்கள் விண்ணப்பிக்க இயலும். இவர்கள், கல்லுாரியில் சேர்ந்த நாளிலிருந்து முழுநேர டிப்ளமோ படிப்பின் கீழ் 6 ஆண்டுகளுக்குள்ளும், சாண்ட்விச் பிரிவின் கீழ், ஆறரை ஆண்டுகளுக்குள்ளும், பகுதிநேர பிரிவில், 7 ஆண்டுகளுக்குள்ளும் இருந்தால் மட்டுமே, மறுசேர்க்கைக்கு தகுதி பெறுவர்.தேர்வுக்கு விண்ணப்பித்து, நுழைவுத்தேர்வு பெற்று சுகவீனம் காரணமாக, தேர்வெழுத முடியாமல் போன மாணவர்கள், அடுத்த பருவங்களை தொடரவும் விண்ணப்பிக்கலாம்.
இம்மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளம் வாயிலாக, வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்ப இயக்குனரகம் தெரிவித்துள்ளது
إرسال تعليق