Title of the document


அண்ணா பல்கலையின், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியுள்ளது. இந்த முறையாவது, முறைகேடு இன்றி நடக்குமா... என்ற, கேள்வி எழுந்துள்ளது.
அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளுக்கான, செமஸ்டர் தேர்வுகளில், தொடர்ந்து முறைகேடுகள் நடக்கின்றன.இதனால், இன்ஜினியரிங் படிப்பின் மீதான நம்பகத்தன்மை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தேர்ச்சி சதவீதமும், மாணவர்களின் சேர்க்கையும், பெருமளவு குறைந்து உள்ளது.செமஸ்டர் தேர்வுஇந்நிலையில், நவம்பர் மாத செமஸ்டர் தேர்வு, ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதில், 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.கடந்த ஆண்டுகளில், மதிப்பீட்டு முறையில் மட்டுமே, புகார்கள் இருந்தன. நடப்பு செமஸ்டரில், தேர்வு வினாத்தாளிலும் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளன.நேற்று முன்தினம் நடந்த, கணிதம் இரண்டாம் தாள் தேர்வில், சில கல்லுாரிகளில், வினாத்தாள், 'லீக்' ஆனது. இதுகுறித்து, அண்ணா பல்கலை தேர்வு துறை விசாரணையை துவக்கியுள்ளது.இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியுள்ளது. இதில், சீனியர் பேராசிரியர்கள் மட்டுமே, பணி அமர்த்தப்பட்டுள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், முந்தைய ஆண்டுகளில் இருந்த தரம், மிகவும் குறைந்து விட்டது. பல்கலையிலும், உறுப்பு கல்லுாரிகளிலும், சீனியர், ஜூனியர் ஆசிரியர்களிடையே பாகுபாடு அதிகரித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகளில், சீனியர்கள், தாங்கள் விரும்பும் பாடங்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். மற்ற பாடங்களின் விடைத்தாள்களை திருத்த, பாடத்தை பற்றியே தெரியாத, ஜூனியர் அல்லது வகுப்பு எடுக்காத பிற பேராசிரியர்களை அமர்த்துகின்றனர்.குளுறுபடிஇந்த குளறுபடிகளால், விடைத்தாள் திருத்தம் முறையாக நடக்காமல், மறுமதிப்பீடு கோரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லஞ்சம் பெற்று, மதிப்பெண் வழங்கியதாக, சில மாதங்களுக்கு முன், புகார் எழுந்தது; இன்னும் நடவடிக்கை இல்லை.தேர்வு நடக்கும் போது, விடை திருத்தம் செய்ய வேண்டாம் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்காமல், தேர்வு முடிவதற்கு முன்பே, விடை திருத்தம் துவங்கியுள்ளது. இன்னும், சரியான விடைக் குறிப்பு கூட தயாராகவில்லை. அதற்கு, ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, துணை வேந்தரோ, உயர் கல்வி துறை செயலரோ, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post