Title of the document


கரூர் அருகே, புகளூரில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. காகித நிறுவன செயல் இயக்குனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், கற்றல் குறைபாடுடையவர்களைக் கண்டறிந்து, அவர்கள் திறம்பட படிப்பதற்கு உதவி செய்யும் விதமாக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. காகித நிறுவனம் சார்பில், இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 20 அரசு பள்ளி ஆசிரியர்கள், 14 டி.என்.பி.எல்., பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம், 34 பேர் பங்கேற்றனர். ஏழு நாட்கள், மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷனை சேர்ந்த லட்சுமி ஹரிஹரன், லதா வசந்தகுமார், ஸ்வேதா சந்திரசேகர் மற்றும் ஹரிணி மோகன் முதலான பயிற்சியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஏழு நாட்கள் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சியில், முதன்மை பொது மேலாளர் பட்டாபிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post