Title of the document

ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.
மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.
மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post