Title of the document

மூலத்துறை அரசுப் பள்ளி மாணவ மாணவியர் முதலிடம்
"அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பில் 'தூய்மை இந்தியா' என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு கட்டுரைப் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட, சிறுமுகை அருகே உள்ள 'மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின்' எட்டாம் வகுப்பு மாணவி ராசிகா மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ராசிகாவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவர்கள் பாராட்டி பரிசும் சான்றிதழும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் அவர்களும் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினார்.
மேலும் சிறுசேமிப்புத் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் விமலுக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
முதலிடம் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவ மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேசிங்கு, ராஜேந்திரன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم