மாணவர்களிடம் ஆய்வு ஈடுபாட்டை அதிகரிக்கும், 'இம்பார்ட்' திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாணவர்களிடம், ஆய்வு செய்யும் ஆர்வத்தை அதிகரிக்கும் 'இம்பார்ட்' திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்ட செயல்பாடு குறித்தும், மாணவர்களை வழிநடத்துவது குறித்தும் நேற்று ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட, 255 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மணி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பொள்ளாச்சி கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, எஸ்.எஸ்.ஏ., உதவி மாவட்ட அலுவலர் பெல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Post a Comment