
தகுதியற்ற ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் விபரத்தை, அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.பணியினை மறு ஆய்வு செய்வது சார்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''25 ஆண்டு பணி முடித்த தகுதியற்றவர்கள், 50 வயதை கடந்தவர்களில் தகுதியற்றவர்கள் விபரத்தை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.தகுதியின்மையை பணிக்குறைபாடு, திறமையின்மை, சிரத்தையின்மை போன்ற அளவீடுகளால் நிர்ணயித்து அனுப்ப வேண்டும், ''என கூறப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறும்போது : தகுதியற்றவர்கள் கணக்கெடுப்பால், சீனியாரிட்டி பாதிக்கப்படும். பழிவாங்கல் நடவடிக்கையாக இந்த கணக்கெடுப்பு மாறும். சுய விருப்பு வெறுப்புகள் தலை துாக்க வாய்ப்பு உள்ளது. உண்மையான கணக்கெடுப்பு நடக்க வாய்ப்பு இல்லை. வெளிப்படை தன்மை இருக்காது, என்றார்.
إرسال تعليق