Title of the document

சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியின கிராமத்தில் உள்ள, அரசு ஆரம்பப் பள்ளியில், பரமபதம் வரைந்து, மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. 

சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிலாஸ்பூர் மாவட்டத்தில், மலைகள் மற்றும் காடுகளுக்கு மத்தியில், மட்னா என்ற பழங்குடி கிராமம் உள்ளது. 
இங்குள்ள, அரசு ஆரம்பப் பள்ளியில், 25 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, பாம்பும், ஏணியும் உள்ள பரமபதம் வரைந்து, கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.இது குறித்து, பள்ளி ஆசிரியர் ராதேஷ்யாம் சதுர்வேதி கூறியதாவது:பள்ளியில், அனைத்து பாடங்களும் விளையாட்டு முறையில் கற்பிக்கப்படுகின்றன. பரமபதம் மூலம், கணித வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் முறைகள் கற்பிக்கப்படுகின்றன.ஆங்கில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் அமைக்கவும், பரமபதம் வாயிலாகவே கற்பிக்கப்படுவதால், மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். இதனால், மாணவ - மாணவியருக்கு, கற்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم