Title of the document

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இனி பராமரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். 
இன்று(15ம் தேதி) வீடியோ கான்பரன்ஸ் மூலம் பள்ளிகல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடுகின்றனர். தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், தினமும் காலை 9.15க்கு துவங்கி மாலை 4.15க்கு முடிவடைகிறது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி துவங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக, தலைமை ஆசிரியர் அறையில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறையாக இருந்து வருகிறது.
இது போல மதியமும் பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும். குறித்த நேரத்தில் வரமுடியாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை சரி கட்டி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர். பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்தால், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையில் சிக்கல் ஏற்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post