
பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது.இது
குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:அக்டோபரில், பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, விடைத்தாள் நகல்
கோரியவர்கள், இன்று பிற்பகல் முதல்,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில்,
விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு
விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை
பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், இரண்டு
நகல்கள் எடுத்து, நாளை முதல், 15ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், முதன்மைக்
கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு
கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை, முதன்மைக் கல்வி
அதிகாரி அலுவலகத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
Post a Comment