Title of the document

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று புயலால் பாதிக்கப்பட்டு பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் தருவிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்துக்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை 40,850 பாடப்புத்தகங்களும், நாகை, திருவாரூர், மாவட்டங்களுக்கு 78,800 பாடப்புத்தகங்களும் என மொத்தம் 1.19லட்சம் பாடப் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 
தஞ்சை மாவட்டத்தில் 692 பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளில் 500பேரின்  பாடப்புத்தகங்கள் புயலால் சேதமடைந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனவே புதிய பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post