Title of the document

Pre KG, LKG, UKG ..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ? 
தனியார் மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வரும் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் பொதுவான திட்டமாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இத்திட்டத்தின் படி கல்விக்கான பாடத் திட்டத்தை தயாரிக்க ஆணையிட்டனர். இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி உள்ளிட்ட பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி வழியில் எஸ்.சி.இ.ஆ.ர்டி உருவாக்கி www.tnscert.org என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனை   ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?    மேலும், இத்திட்டம் குறித்து பொதுவான கருத்து கேட்கும் வகையில், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தெரிவிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக் கணிப்பு நேரலை - நீங்களும் வாக்களிப்பீர் அதன்படி இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்குக் கடிதம் மூலமாகவோ அல்லது awpb2018@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலோ தங்களது கருத்துக்களை வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post