பள்ளி மாணவனை வகுப்பறைக்குள் பூட்டிய ஆசிரியர்கள்!! பொதுமக்கள் போராட்டம்!!


மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளிக்குள் பூட்டிவிட்டு சென்ற அவலம் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜினோர் மாவட்டத்தில் ராம்ஜிவளா கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் சுற்று வட்டார மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த ஆதித்ய குமார் (வயது 8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான்.
மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு விளையாடிவிட்டு ஆதித்ய குமார் அசதியில் தூங்கிவிட்டான். மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் அனைவரும் கிளம்பி சென்றுள்ளனர். இந்த மாணவன் தூங்கி கொண்டிருந்ததை உள்ளே கவனிக்காமல் ஆசிரியர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு சென்றனர். திடீர் என தூக்கத்தில் இருந்த எழுந்த மாணவனுக்கு வகுப்பறை பூட்டியது தெரிந்து பயத்தில் அழுது கொண்டிருந்தான். பக்கத்தில் உள்ள கடைகளுக்கு மாணவனின் அழுகை சத்தம் வரவே உடனே அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் வந்த பிறகு வகுப்பறையை திறந்து மாணவனை மீட்டனர். சற்று நேரத்தில் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனை உள்ளே வைத்து பூட்டியதை அடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பின்னர் காவல்துறையினர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்கள் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்

0 Comments:

Post a Comment