தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்த ஆண்டு 6,9,11-ம் வகுப்புக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டது. 11-ம் வகுப்பு பாடப்பகுதிகள் அதிகமாகவும், பல பகுதிகள் கடினமாகவும் உள்ளன என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் பதினொன்றாம் வகுப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளையும், கடினமான பகுதிகளையும் எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம். இந்தப் பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றன
பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உதவியுடன் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிடப்படுகிறது. இந்த வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியே தயாரித்துப் பதிவேற்றுவதால் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பாடப் புத்தகங்களை வீடியோக்களாக பதிவுசெய்து வரும் படப்பதிவு இயக்குநர் அமலன் ஜெரோமிடம் பேசினோம். ``பதினொன்றாம் வகுப்பில் தடுமாறுபவர்கள், தேர்வு பயம் கொண்டவர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முதல்கட்டமாக, பதினொன்றாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் 143, இயற்பியலில் 112, வேதியியலில் 81, தாவரவியல் பாடத்தில் 57, கணினி அறிவியலில் 22, பொருளியல் பாடத்தில் 6, விலங்கியல் பாடத்தில் 8 என இதுவரை 500 -க்கும் மேற்பட்ட வீடியோக்களைத் தயாரித்துள்ளோம். தற்போது கணக்கு பதிவியியல், பிஸினஸ் மேக்ஸ் போன்ற பாடங்களுக்கான வீடியோக்களைத் தயாரித்து வருகிறோம். பாடம் நடத்துவதுபோல் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் பாடத்தைக் குறித்து உரையாடுவது போலும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் உரையாடுவது போலும் வீடியோக்களைத் தயாரித்து பதிவேற்றம் செய்து வருகிறோம்.
Post a Comment