Title of the document

தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியுடன், கம்ப்யூட்டர் பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியுடன், கம்ப்யூட்டர் பயிற்றுவிக்கும், தனியார் நிறுவனத்தினர், மாணவர்கள் விவரத்துடன், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் வரிசை எண், பெயர், இனம், கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சியின் பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, பயிற்சி காலம், பயிற்சிக்கான ஒட்டுமொத்த கட்டணம் ஆகிய விவரங்களுடன், நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.பயிற்சி பெறும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு மட்டும் ஊக்கத்தொகை கிடைக்கும். நிறுவனத்தினர், உரிய விவரங்களுடன், வரும், 31ம் தேதிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post